நியூ சவுத் வேல்ஸில் வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிய நிறுவப்பட்ட கேமராக்கள் பல குற்றங்களை கண்டுபிடித்துள்ளன.
சீட் பெல்ட் அணியாதது, சிறு குழந்தைகளை முன் இருக்கையில் பாதுகாப்பின்றி அழைத்துச் செல்வது போன்ற பல குற்றங்கள் நடப்பதாக மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.
வாகனம் ஓட்டும் போது முன் இருக்கையில் குழந்தைகளுக்கு உணவளிப்பது, நியூ சவுத் வேல்ஸ் சாலைகளில் உள்ள கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்ட ஆபத்தான குற்றம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
பாதுகாப்பு கேமரா அமைப்பின் முதல் 21 நாட்களில் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட 11,400 அபராதங்களில் முக்கால் பங்கு சீட் பெல்ட் குற்றங்களுக்காக என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
சீட் பெல்ட் அணியத் தவறினால் $410 அபராதமும் மூன்று டிமெரிட் புள்ளிகளும் விதிக்கப்படும்.
கையடக்கத் தொலைபேசிகளைக் கண்டறிவதற்காக நிறுவப்பட்ட கேமராக்களின் வலையமைப்பு கடந்த ஜூலை மாதம் முதல் சீட் பெல்ட் தொடர்பான குறைபாடுகளைக் கண்டறியத் தொடங்கியது.
2023ஆம் ஆண்டு பொலிஸாரால் வழங்கப்பட்ட மொத்த அபராதத் தொகையை விட, மூன்று வார காலப்பகுதியில் அதிக குற்றங்களை கேமரா தொழில்நுட்பம் கண்டறிந்துள்ளமை விசேட அம்சமாகும்.
நியூ சவுத் வேல்ஸ் சாலைகளில் சோதனை செய்யப்பட்ட 8.3 மில்லியன் வாகனங்களில், 700ல் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.