Sportsபாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் ஒற்றைக் கை வீராங்கனை

பாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தும் ஒற்றைக் கை வீராங்கனை

-

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒற்றைக் கையுடன் விளையாடி பார்வையாளர்களை பிரான்ஸைச் சேர்ந்த table tennis வீராங்கனை ஒருவர் அசரவைத்துள்ளார் .

முதன்முதலாக பிரேசிலின் கைகளை இழந்த table tennis வீராங்கனையான Bruna Alexandre, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் அவரின் பாராலிம்பிக் கனவு நனவாகப் போகிறது.

29 வயதான Bruna Alexandre, த்ரோம்போசிஸ் என்றழைக்கப்படும் இரத்தம் உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது வலது கை துண்டிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதல் பாரா-தடகள வீராங்கனை என்ற பெருமையையும் Bruna Alexandre பெற்றுள்ளார்.

இது குறித்து Alexandre கூறுகையில், “நான் பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முயற்சித்து வருகிறேன். பிரேசிலில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால் அது கடினமாக இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

ஆனால், நான் அதில் வெற்றியும் பெற்றேன். அதனால், நான் இங்கு வந்து இருக்கிறேன். இன்று என்னுடைய மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது” என்று கூறினார்.

Alexandre தன்னுடைய 7 வயதில் டேபள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், ஒரு கையால் விளையாடுவது அவருக்கு கடினமாக இருந்துள்ளது. ஆனால், அவர் இடது கையால் பந்தை மேலே தூக்கி அடித்து பந்தை சுழல வைத்து திருப்பி அடிக்கும் திறமையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.

சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய திறமைகளை மாற்றியமைக்க முடிந்தது. தற்போது சர்வீஸ் எனது வலிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்று திறமையான ஸ்கேட்போர்ட் மற்றும் சைக்கிளிங்கிலும் திறமைபெற்ற Alexandre கூறினார்.

Alexandre ஏற்கனவே பதக்கங்களை வென்ற பராலிம்பியன் ஆவார். இவர் 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

அவர் பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக திங்கட்கிழமை களமிறங்கினார். முதல் போட்டியில் சக்திவாய்ந்த தென்கொரிய வீராங்கனைகளை எதிர்கொண்டார். மூன்றாம் தரவரிசையில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் பிரேசிலின் சவாலை முறியடித்தனர்.

தோல்விக்குப் பிறகு கூறும்போது, “தோல்விக்குப் பின்னர் உங்களுக்கு ஒரு கை அல்லது ஒரு கால் இருக்கிறதா? என்பதைப் பொருள்படுத்தாமல் எல்லாம் சாத்தியம் என்பதைக் காட்ட வேண்டும்” என்றும் கூறினார்.

உற்சாகமான வரவேற்புக்கு பிரான்ஸ் மக்களுக்கு நன்றி கூறிய அவர், “இன்று கனவு நனவாகி இருப்பதை நான் கொண்டாடுகிறேன். இன்னும் பல நாட்களுக்கு கொண்டாடுவேன்” என்றார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...