நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இறந்த ஐந்து பயணிகளில், நான்கு சீனர்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண்.
உயிரிழந்த மற்றைய நபர் நேபாள விமானி என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானம் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட 03 நிமிடங்களில் பிரதான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
தலைநகரை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீ பரவி வருவதாக மக்கள் வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பில் அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல மலைப்பிரதேசங்களைக் கொண்ட நேபாளத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இவ்வாறான விமான விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.