வருடாந்த சிட்டி25சர்ஃப் மாரத்தான் போட்டிக்காக சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல முக்கிய சாலைகள் இந்த வார இறுதியில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்காக 90,000 பேர் சிட்னிக்கு வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிட்னியைச் சுற்றியுள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளை முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Woolloomooloo மற்றும் Edgecliff இடையேயான சாலைகள் காலை 6 மணி முதல் மூடப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
டபுள் பே மற்றும் போண்டி சாலைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மூடப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.
போண்டி கடற்கரைக்கும் போண்டி சந்திப்புக்கும் இடைப்பட்ட பகுதிகளும் காலை 7 மணிக்கு மூடப்படும் என்றும், மாலை 4 மணிக்குள் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் சிட்னி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.