Newsஒரே நாளில் 15 கின்னஸ் சாதனை படைத்த நபர்

ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனை படைத்த நபர்

-

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளுக்கு மேல் முறியடித்துள்ளார்.

ஒவ்வொரு சாதனையாக முறியடித்த இவருக்கு போரடித்து விட்டதோ என்னவோ, சமீபத்தில் அவர் திடீரென லண்டனிலுள்ள கின்னஸ் உலக சாதனைகளின் தலைமையகத்துக்குச் சென்று, ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்து விட்டுச் சென்றுள்ளார்.

அதாவது, முதலில் ஜக்கிலிங் வித்தை எனப்படும் 3 பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உயரே தூக்கிப்போட்டு ஒரு நிமிடத்துக்குள் அதிக தடவைகள் அப்பிள்களைக் கடித்த சாதனையை டேவிட் ரஷ் முறியடித்து, 198 தடவைகள் அப்பிள்களைக் கடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

2ஆவது சாதனையாக டேபிள் டென்னிஸ் பந்துகளை 2 போத்தல்களின் மூடிகளில் 10 தடவைகள் மாற்று கைகளைப் பயன்படுத்தி வேகமாக துள்ளச் செய்தார். மிகவும் நூதனமாக இச்சாதனையை வெறும் 2.09 நிமிடங்களில் செய்து முடித்து அசத்தியுள்ளார்.

அதேபோல் 30 விநாடிகளில் கையின் பக்கங்களை பேஸ்போலால் மாறி மாறி அடித்த சாதனையையும் அவர் முறியடித்தார். அவர் 125 தடவைகள் பந்தை இவ்வாறு அடித்து அசத்தியுள்ளார்.

இதேபோன்று வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்துப் பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 விநாடிகளில் அதிக டி-சேர்ட்கள் அணிதல், 10 டொய்லெட் பேப்பர் ரோல்களை ஒரே கையால் வேகமாக அடுக்கி வைத்தல், அதிகளவு தண்ணீரை 30 விநாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லீற்றர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரோ மூலம் மிக வேகமாகக் குடிப்பது உள்ளிட்ட 15 வகைகளில் குறைந்த நிமிடத்தில் கின்னஸ் சாதனையை ஒரே நாளில் இந்த சாதனை மனிதன் முறியடித்துக் காட்டியுள்ளார்.

Latest news

இளவரசி கேட்டின் புற்றுநோய் நிலை குறித்து வெளியான சிறப்பு அறிக்கை

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயில் இருந்து குணமடைந்து வருவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பதாக அவர் அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்...

Australia Day-யில் முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் மத்தியில் விசேட கவனத்தை ஈர்த்துள்ள அவுஸ்திரேலியா தினத்தன்று (ஜனவரி 26) அந்நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம்...

எலோன் மஸ்கை எச்சரித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்படும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், எதிர்வரும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்...

தரத்தில் சிறந்து விளங்கும் விக்டோரியா கல்வித்துறை!

சர்வதேச மாணவர் சமூகம் விக்டோரியாவில் உள்ள பள்ளி அமைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் தரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம்...