Newsவீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் - பங்களாதேஷில் இந்துக்கள் போராட்டம்

வீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் – பங்களாதேஷில் இந்துக்கள் போராட்டம்

-

பங்களாதேஷில் தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து சிறுபான்மையினரான இந்துக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த ஒகஸ்ட் 5-ஆம் திகதி பங்களாதேஷ் பிரதமா் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா், அந்நாட்டில் உள்ள 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக இரண்டு பங்களாதேஷ் இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அங்குள்ள இந்து கோயில்கள், வீடுகள், வணிக இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட இரண்டு இந்து தலைவா்களும் கொல்லப்பட்டனா்.

இந்தத் தாக்குதலை கண்டித்து பங்களாதேஷ் தலைநகா் டாக்கா மற்றும் சட்டாகிராம் பகுதியில் இந்துக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2-ஆவது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்று தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தினா்.

அவா்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் மற்றும் மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அந்நாட்டில் சிறுபான்மையினரை துன்புறுத்துவோருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு தீா்ப்பாயங்கள் அமைக்க வேண்டும், பாராளுமன்ற இடங்களில் 10 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்து போராட்டாக்காரா்கள் வலியுறுத்தினா்.

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...