Melbourneஆபத்தை குறைக்க தவறிய மெல்போர்ன் முதியோர் இல்லம் - விதிக்கப்பட்ட அபராதம்

ஆபத்தை குறைக்க தவறிய மெல்போர்ன் முதியோர் இல்லம் – விதிக்கப்பட்ட அபராதம்

-

மெல்போர்ன் முதியோர் இல்லத்தில் 90 வயது முதியவர் தீக்காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு $66,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஹீட்டரில் இருந்து இந்த முதியவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் உள்ள Broadmeadows மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் கடுமையான காயத்தின் அபாயத்தைக் குறைக்க அல்லது அகற்றத் தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

நடக்க முடியாத நிலையில் உள்ள இந்த நபர் முதியோர் இல்லத்தில் கட்டிலில் இருந்து விழுந்து படுக்கைக்கு அருகில் உள்ள சுவரில் இருந்த ஹீட்டர் மீது கால்கள் மோதி பலத்த தீக்காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு விபத்தின் பின்னர் அவர் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், முதியோர் இல்லத்தில் COVID-19 நிலைமை காரணமாக அவர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாறாக, மருத்துவமனை அவரை முதியோர் இல்லத்தில் வைத்து சிகிச்சை அளித்தது.

பின்னர், தீக்காயங்கள் கடுமையாகி, தோல் ஒட்டுதல் மற்றும் விரல் துண்டிக்கப்பட்டு, மார்ச் 2022 இல் அவர் இறந்தார்.

இச்சம்பவத்துடன் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் இந்த விபத்தை ஏற்படுத்திய ஹீட்டர்களினால் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...