பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியை முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பிய அவுஸ்திரேலிய அணிக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியர்கள் பதக்கங்களை வெல்லாவிட்டாலும், இந்த வருட விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்த விதம் பெருமையளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
தாய் நாட்டிற்கு திரும்பிய ஒவ்வொரு வீரரும் பதக்கம் கொண்டு வரவில்லையென்றாலும், ஒவ்வொருவரும் தங்கம் போல மதிப்புமிக்கவர்கள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற அணி தங்களால் இயன்றதை செய்து அவுஸ்திரேலியாவுக்கு மரியாதை அளித்து வெற்றி பெறாவிட்டாலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவுகளின் அழுத்தத்தினால் மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும், அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய அணிக்கு தயக்கமின்றி நிதி வழங்கியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
இந்த விளையாட்டு வீரர்கள் விளையாட்டின் மூலம் பெருமளவு பணம் சம்பாதிப்பதில்லை எனவும், விளையாட்டின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் நிச்சயமாக இவ்வாறான தியாகங்களைச் செய்வதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.