கூகுள் நிறுவனம் முதன்முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் பிக்சல் வாட்ச் மற்றும் பிக்சல் பட்ஸ் ஹெட்ஃபோன்களின் புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் புதிய கேமராக்கள் மற்றும் AI தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஆகியவை 6.3 இன்ச் திரையைக் கொண்டுள்ளன, அதே சமயம் ப்ரோவின் புதிய எக்ஸ்எல் மாடல் 6.8 இன்ச் திரையைக் கொண்டுள்ளது.
இந்த மூன்று போன்களின் கேமராக்களும் 10 மடங்கு பெரிதாக்கி புகைப்படங்களை எடுக்க முடியும் என்றும் AI தொழில்நுட்பத்தில் புதிய சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன்களில் Add me வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் புகைப்படங்களில் தேவைக்கேற்ப வெற்றிடங்களை நிரப்பும் வசதியும் உள்ளது.
அதுமட்டுமின்றி, பேட்டரி ஆயுளும் சாதாரண போன்களை விட அதிகமாக இருப்பதுடன், நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு.
இந்த மாடல்கள் செப்டம்பர் 2 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.