இன்று அதிகாலை, மெல்போர்னின் க்ளென்ரோய் பகுதியில் புகையிலை கடைக்கு அருகில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தும் கடந்த காலப்பகுதியில் அவ்வப்போது இடம்பெற்ற தீப்பரவலுக்கும் தொடர்புள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாலை 4.50 மணியளவில் க்ளென்ராய் பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக வந்த தகவலையடுத்து தீயணைப்புப் படையினர் அங்கு வந்தனர்.
மூன்று பேர் காருக்குள் எதையோ ஊற்றி தீ வைப்பதை பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
தீ பற்றி எரிந்ததும் மக்கள் ஓடிச்சென்றதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய வகையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய நாட்களில் மெல்பேர்னைச் சுற்றி பதிவாகிய தீக்கும் இந்த தீவிபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள புகையிலை கடையே சந்தேகநபர்களின் இலக்கா என்பது இதுவரை தெரியவரவில்லை.