Newsகுரங்கு அம்மை நோயால் ஆபிரிக்காவில் 18,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

குரங்கு அம்மை நோயால் ஆபிரிக்காவில் 18,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

-

ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குரங்கு அம்மை நோய் ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்த் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 1 வாரத்தில் மட்டும் 1,200 பாதிப்புகள் பதிவானதாகவும் ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

மூன்று வகைகளில் இந்த வைரஸ் இருப்பதாகவும், அதில் கிளேட் 1 பி வகைமை உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தானது மற்றும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த புதன் (ஒகஸ்ட் 14) அன்று உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்தது.

இன்று வரை, 12 ஆபிரிக்க ஒன்றிய உறுப்பு நாடுகளில் 3101 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு, 15,636 பேர் சந்தேகத்தின் பேரில் பரிசோதனையில் இருப்பதாகவும், அதில் 541 பேர் உயிரிழந்து இறப்பு விகிதம் 2.89% பதிவானதாகவும் ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

கிளேட் 1 பி வகைமை வைரஸ் கடந்த செப்டம்பர் 2023-ல் முதலில் கண்டறியப்பட்ட கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் இதுவரை 1,005 பாதிப்புகள் கண்டறியப்பட்டு 222 பேருக்கு நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் 24 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரத்தில் ஆப்ரிக்காவுக்கு வெளியே சுவீடன் மற்றும் பாகிஸ்தானில் முதல் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மருத்துவ அவசரக் குழுவின் பரிந்துரைகளை விரைவில் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குரங்கு அம்மை என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் ஆகும். நெருக்கமான உடல் தொடர்பு மூலம் மனிதர்களிடையேயும் பரவக்கூடியது.

குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தசைகளில் வலி மற்றும் பெரிய கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மற்ற வகை வைரஸ்கள் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் கிளேட் 1 பி வகைமை உடல் முழுவதும் தோல் வெடிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள்...

காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது...

பெரியம்மை நோய்க்கு எதிராக ‘MPOX’ எனும் தடுப்பூசி

பெரியம்மை நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இளம் வயதினர் இடையே மெல்ல பரவிவரும் நிலையில் அதற்கு எதிரான 'MPOX' எனும் தடுப்பூசியை 12 வயது முதல்...

200,000 ஆஸ்திரேலியர்களுக்கு இலவச Shingles தடுப்பூசி

நோய்த்தடுப்புத் திட்டத்தின் விரிவாக்கத்தில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள ஆஸ்திரேலியர்கள் Shingles தடுப்பூசியை இலவசமாகப் பெறுவார்கள். இந்த இலவச தடுப்பூசி திட்டம் இப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதார நிலைமைகள்...

பெர்த் போலீஸ் அதிகாரி மீது மோதிய கார் – பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

பெர்த்தில் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது கார் மோதி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாலை 5 மணியளவில் Belmont-ல் உள்ள Stanton சாலை...

NSW-வில் அறிமுகமாகும் “இலவச வாடகை சொத்து ஒப்பீட்டு கருவி”

நியூ சவுத் வேல்ஸில் உள்ள வாடகைதாரர்கள் இப்போது மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இலவச வாடகை ஒப்பீட்டு கருவியைப் பயன்படுத்தி, தாங்கள் செலுத்தக் கேட்கப்படும் வாடகை நியாயமானதா...