மெல்போர்னின் நரே வாரன் தெற்கில் உள்ள பெர்விக் ஸ்பிரிங்ஸ் நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெர்விக் ஸ்பிரிங்ஸில் உள்ள பிரபலமான நடைபாதை மற்றும் இருப்புப் பகுதிக்கு அருகே பெண்ணின் சடலம் தண்ணீரில் மிதந்துள்ளது.
இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரது அடையாளம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.