சிட்னி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
பல சிட்னி நீர்நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனப் பொருளான PFAS அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், PFAS இன் செறிவு அமெரிக்காவில் பாதுகாப்பான வரம்புகளுக்கு மேல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக நீலமலை, வடக்கு ரிச்மண்ட் மற்றும் கேஸ்கேட் அணை பகுதிகளில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிட்னி நீர் வழங்கல் ஆராய்ச்சி நிறுவனம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீரில் உள்ள PFAS இரசாயனங்களைக் கண்டறிய கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு PFAS உட்கொள்வது குறிப்பாக கல்லீரலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் பிறப்பு குறைபாடுகளை பாதிக்கிறது என்று அடையாளம் கண்டுள்ளது.