மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வந்த ஜெட்ஸ்டார் விமானத்தின் அவசர வழி கதவை திறந்த பயணி ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
சிட்னியில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்த விமானம் தரையிறங்கியவுடன் அவசர வழியை திறந்து பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சிட்னியில் இருந்து ஜெட்ஸ்டார் விமானம் JQ 507 இல் நடந்ததாக கூறப்படுகிறது.
ஜெட்ஸ்டார் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், காலை 10 மணியளவில் மெல்போர்னுக்கு வந்து கேட் 43 இல் நிறுத்தப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர் அவசர கதவைத் திறந்தார்.
கதவு திறக்கப்பட்டதும் பணியாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பயணி விமானத்தின் இறக்கைகளில் ஒன்றில் வந்து ஒரு இயந்திரத்தின் அருகே நழுவி தரையில் விழுந்தார்.
அங்கு அவர் கைது செய்யப்பட்டார், இதற்குள் விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.