Sydneyசிட்னியை பாதித்த ஒரு வலுவான நிலநடுக்கம் - ஏற்பட்டுள்ள பல சேதங்கள்

சிட்னியை பாதித்த ஒரு வலுவான நிலநடுக்கம் – ஏற்பட்டுள்ள பல சேதங்கள்

-

ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள சிட்னி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிட்னிக்கு வடக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுரங்க நகரான டென்மன் அருகே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது தெரியவந்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சிட்னியைச் சுற்றியுள்ள டப்போ, மஸ்வெல்புரூக், நியூகேஸில், போர்ட் மெக்குவாரி மற்றும் மவுண்ட் ட்ரூயிட் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இதனால் பல வீடுகள், உடைமைகள் சேதம் அடைந்துள்ளதுடன், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மஸ்வெல்ப்ரூக், டென்மன், ஜெர்ரிஸ் ப்ளைன்ஸ், புரீன், பெங்காலா ஆகிய பகுதிகளில் 2500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நிலநடுக்கத்திற்குப் பிறகு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...