பிரேக் சிஸ்டம் பிரச்சனையால் பல கார் மாடல்களில் 26,491 கார்களை BMW திரும்ப அழைத்துள்ளது.
அந்தந்த கார்களில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாடு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைபாடு 2022 முதல் 2024 வரை தயாரிக்கப்பட்ட சில MINI மற்றும் Alpina X மாடல்களை பாதிக்கிறது.
இந்த குறைபாடு உள்ள வாகனங்கள் பிரேக் பிடிக்கும் போது அதிக விசையை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
எனவே, சில சமயங்களில் விபத்து அல்லது மோதலை தவிர்க்க ஓட்டுநர்கள் பிரேக்கிங் செய்வதில் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
பிரேக்கின் செயல்திறன் குறைவதால், சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகள், பாதசாரிகள் மற்றும் பிறருக்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், கார்கள் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை இருந்தாலும் கார்களை ஓட்டிச் செல்லலாம் என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் வாகனத்தின் பிரேக் தொடர்பான எச்சரிக்கை விளக்குகள் மூலம் இந்த குறைபாடு இருப்பதை அடையாளம் காண முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய பிழை ஏற்பட்டால், மென்பொருள் புதுப்பிப்புக்கு உடனடியாக அருகிலுள்ள BMW டீலரைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறது.