Newsவழி தெரியாது பாலைவனத்தில் நான்கு நாட்கள் பரிதவித்த இளைஞன் உயிரிழப்பு

வழி தெரியாது பாலைவனத்தில் நான்கு நாட்கள் பரிதவித்த இளைஞன் உயிரிழப்பு

-

சவூதி அரேபிய பாலைவனத்தில் நான்கு நாட்களாக, வழி தெரியாமல் தவித்துவந்த இளைஞனொருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த முகமது ஷேசாத் கான் என்ற 27வயதுடைய இளைஞன், சவூதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அல் காலி பாலைவனத்துக்கு சென்றுள்ளார்.

சுமார் 650 கிலோ மீற்றர் பரப்பு கொண்ட இந்த பாலைவனம் நஜ்ரான் மாகாணங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் யேமன் வரை நீண்டுள்ளது.

இந்த பாலைவனத்திற்கு, முகமது ஷேசாத் கான் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வர வழி தெரியாத நிலையில் அங்கு சுற்றிதிரிந்துள்ளார். விடா முயற்சியாக 4 நாட்களாக போராடிய நிலையில் அவரால் வீட்டுக்கு திரும்பும் வழியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

பாலைவனம் என்றதும் தண்ணீர் இருக்காது, வெயில் கொளுத்தும் என நம் அனைவருக்கும் தெரியும். அவர் உணவு, தண்ணீர் இல்லாமல் நான்கு நாட்கள் தவித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பாலைவன மணல் திட்டுகளில் இரு சக்கர வாகனமொன்றின் அருகேயிருந்து அவரது சடலத்தை அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஊர் விட்டு ஊர் பிழைக்கப்போன இடத்தில், ஷேசாத் கானுக்கு நேர்ந்த துயரம், அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...