Newsவேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க புதிய சட்டம்!

வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க புதிய சட்டம்!

-

தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்குச் சென்றபிறகு, சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களைக் கேட்பதுண்டு.

சில சமயங்களில் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

வேலை இல்லாத நேரத்தில் அமைதியாகப் பொழுதைக் கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை.

இந்தக் குறையைப் போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

அதாவது, வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பைத் துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது.

இந்த நாடுகளின் வரிசையில் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத்திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.

அலுவலக நேரத்திற்குப் பிறகு தொழிலாளர்களைத் தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம்.

நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்குப் பதில் அளிக்கலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் அவுஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் எனப் பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.இந்நிலையில், வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பைத் துண்டிக்கும் உரிமைச் சட்டம் வரும் 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...