குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
கொங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. ‘எம்பொக்ஸ்’ எனப்படும் குரங்கம்மை தொற்று, உலகளாவிய சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
அந்தவகையில், இந்தாண்டில் மட்டும் கொங்கோவில் சுமார் 18 ஆயிரம் பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 615 பேர் உயிரிழந்துள்ளனரென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இது பற்றி விஞ்ஞானிகள் தெரிவிக்கையில்,
குரங்கம்மை திரிபு அதிவேகமாக உருமாற்றமடைந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் வைரஸை தடுப்பதற்குள் வேகமாக பரவுகிறது; கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு திறன் கொண்டர்களை எளிதில் தாக்குவதுடன், உயிரிழக்கும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி தமிழன்