Newsவிக்டோரியாவில் மரம் விழுந்ததில் ஆண் ஒருவர் பலி

விக்டோரியாவில் மரம் விழுந்ததில் ஆண் ஒருவர் பலி

-

விக்டோரியாவில் உள்ள Gellibrand இல் கார் மீது மரம் விழுந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார்.

அவர்கள் பயணித்த கார் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரில் சிக்கியிருந்த தம்பதியர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மெல்பேர்னில் இருந்து சுமார் 175 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜெல்லிபிரான்ட் பகுதியில் இன்று பலத்த காற்றுடன் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பெர்ரிஸ் வீதிக்கு அருகில் பிரதான வீதியில் மரம் விழுந்ததில் அவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காருக்குள் சிக்கிக் கொண்டதாகவும், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருவரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளை தாக்கிய பலத்த காற்றினால் மரங்கள் விழுந்து பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 6000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மணித்தியாலங்களில் பலத்த காற்றினால் மாநிலத்தின் ஏனைய பகுதிகள் பாதிக்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்திருந்தது.

மேலும் இன்று இரவு விக்டோரியா கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் குப்பைகள் குறித்து வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Latest news

இந்த மாத இறுதியில் விதிக்கப்படும் ஆஸ்திரேலியா மீதான டிரம்பின் வரிகள்

ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு "அநேகமாக" வரிகளை விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குறைந்த...

ஆஸ்திரேலியாவில் அரசாங்கத் தடையால் பியர் விலை உயருமா?

RBA-வின் கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கான முன்மொழிவு காரணமாக ஒரு பியன் விலை உயரக்கூடும் என்று ஒரு பிராந்திய Pub உரிமையாளர் எச்சரித்துள்ளார். அவர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத்...

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

பெர்த்தில் ஆண் குழந்தையைக் கொலை செய்த தாய்

பெர்த்தின் வடக்கில் தனது ஏழு மாத மகனைக் கொலை செய்ததாக ஒரு தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை 3.10 மணியளவில் பால்கட்டாவில் உள்ள...