Breaking Newsமெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்த ஈழத்தமிழர்

மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்த ஈழத்தமிழர்

-

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மெல்பேர்னில் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

23 வயதான மனோ யோகலிங்கம் மெல்பேர்ன் நோபல் பார்க் பகுதியில் நேற்றிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் விக்டோரியா பொலிஸார் மற்றும் அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குறித்த இளைஞனை ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மனோ யோகலிங்கம் 2013 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்து சுமார் 11 வருடங்களாக பிரிட்ஜிங் விசாவில் இருப்பதாக மனோ யோகலிங்கத்தின் நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் அகதியின் மரணத்திற்கு அகதிகள் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்ஜிங் விசாவில் மனோ யோகலிங்கம் செலவழித்த நேரமே அவரது மரணத்திற்குக் காரணம் என நம்புவதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய முறைமையின் கீழ் இந்த இலங்கை இளைஞனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேன்முறையீடு செய்ய முயற்சித்ததன் விளைவாகவே இந்த தற்கொலையை காணமுடியும் எனவும் சபையின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு திணைக்களம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த இளைஞனின் நண்பர்கள், உள்துறை அமைச்சகத்தின் டாக்லாண்ட்ஸ் அலுவலகத்திற்கு வெளியே அவரது மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கூடினர்.

பிரிட்ஜிங் விசாவில் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் மனோ யோகலிங்கம் போன்றவர்களுக்கு பிரிட்ஜிங் விசாவில் நிரந்தர அனுமதி கிடைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக அங்கு கூடியிருந்த பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...