Sydneyசிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதி

-

சிட்னியின் ஆஷ்பீல்ட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஆஷ்பீல்ட் சார்லட் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் காயமடைந்த இருவரை கண்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

28 வயதுடைய நபரின் கழுத்து மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை, 29 வயதுடைய நபரொருவரின் கையில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

31 வயதுடைய நபர் ஒருவர் தம்மை தாக்கிவிட்டு ஓடியதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்களுக்கும் முதலுதவி அளித்து பிரின்ஸ் ஆல்பிரட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதேவேளை, வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை 2.10 மணியளவில் Ashfield ஆர்தர் வீதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கையில் பலத்த காயத்துடன் இருந்த அந்த நபர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...