நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 38 ஆண்டுகள் கழித்து கூலி திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
பல திரைப்படங்களில் ரஜினியோடு இணைந்து நடிக்க சத்யராஜை அழைத்த போது, பல காரணங்களால் பல படங்களில் நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இவர்கள் இருவரை இணைத்து சாதித்து காட்டியுள்ளார்.
கூலி திரைப்படத்தில் ராஜசேகர் என்கின்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் படத்தில் நடிக்க உள்ள நிலையில், அவருடைய First Look போஸ்டர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
