Gold Coast-ல் உள்ள Dreamworld பூங்காவில் பணிபுரிந்த பெண் ஒருவர் புலியால் தாக்கப்பட்டார்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர், Gold Coast மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Dreamworld-ல் விலங்குகளை கையாள்பவராக பணிபுரியும் 30 வயதுடைய இந்த பெண்ணுக்கு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரு கைகளிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை மருத்துவர்கள் அவளை Gold Coast பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் முதலுதவி அளித்தனர்.
Dreamworld பூங்கா இன்று பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
Gold Coast-ன் Dreamworld பூங்காவில் ஒன்பது சுமத்ரா மற்றும் வங்காளப் புலிகள் உள்ளன. மேலும் இது Dreamworldன் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பூங்கா நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நன்கு பயிற்சி பெற்ற விலங்குகளை கையாள்பவர் புலியால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இது அரிதான சம்பவம் என்றும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.