மோசமான வானிலை காரணமாக டாஸ்மேனியா மாநிலத்தில் சுமார் 30,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
மேலும் மாநிலத்தில் பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Derwent ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், Meadowbank முதல் Macquarie Plains வரையிலான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த காற்று மற்றும் மழை நிலை நீடிப்பதால் Meadowbank,Glenora, Bushy Park, Gretna, Macquarie Plains போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 570,000 மக்கள்தொகை கொண்ட டாஸ்மேனியா, தொடர்ந்து கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலை நாளை காலை வரை மேற்கு மற்றும் வடக்கு கரையோரங்களை பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் டாஸ்மேனியா மக்கள் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படலாம் என்று அதன் இயக்குனர் மிக் லோவ் கூறினார்.