Breaking Newsபிரித்தானியா வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 குழந்தைகளின் சடலங்கள்!

பிரித்தானியா வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 குழந்தைகளின் சடலங்கள்!

-

பிரித்தானியா -தேம்ஸ் பகுதி Bremer வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த அந்நாட்டுக் காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்து 3 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்டுள்ளனர்.

அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம் எனவும், 3ஆவது நபரின் தலையீடு இல்லை எனவும் காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தினை அடுத்து, Bremer வீதி மூடப்பட்ட நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

வெனிசுலா அதிபரின் வீடியோவை வெளியிட்ட வெள்ளை மாளிகை

அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தற்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நியூயார்க்கில் உள்ள போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (DEA) ஒரு...

வெனிசுலா விமான சேவை நிறுத்தம் – விமானப் பயணங்களில் கடும் இடையூறு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அகற்ற அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட திடீர் ராணுவ நடவடிக்கை காரணமாக கரீபியன் பகுதியில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து...

Winter Olympics-இற்கு முன் 2 தங்கப் பதக்கங்களை வென்ற ஆஸ்திரேலியா

Winter Olympics-இற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு இரண்டு பெண் தடகள வீரர்கள் இரண்டு முக்கியமான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளனர். கனடாவின் கால்கரியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திரா பிரவுன்...

காரின் பின்புறத்தில் பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட கடத்தப்பட்ட இளைஞர்

சிட்னியின் மேற்கில் உள்ள Villawood-இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தில் சிக்கிக் கொண்ட ஒரு இளைஞனை போலீசார் மீட்டுள்ளனர். அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,...