Melbourneமெல்பேர்ண் இல்லம் அருகே பரபரப்பு ஏற்படுத்திய இளைஞன் கைது!

மெல்பேர்ண் இல்லம் அருகே பரபரப்பு ஏற்படுத்திய இளைஞன் கைது!

-

மெல்பேர்ணின் Hopetoun Green பகுதியில் பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கத்தியால் தாக்கிய இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

21 வயதுடைய சந்தேகநபர் நேற்று இரவு 10 மணியளவில் Hopetoun Green பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக கார்களை சேதப்படுத்தியதாகவும், கத்தியைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளம் சந்தேக நபர் தாக்கப்பட்டதில் 54 வயதுடைய ஆணும் 24 வயதுடைய யுவதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதுடைய சந்தேக நபர் இரவு 11.30 மணியளவில் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

சூப்பர் மார்கெட்டில் கீரை வாங்கிய ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள பல முக்கிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட பல வகையான கீரை வகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதில் E coli எனும் பாக்டீரியா அடையாளம் காணப்பட்டுள்ளதே...

11 ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்களின் உரிமங்கள் ரத்து

கடந்த 9 மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்கள் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இடம்பெயர்வு முகவர்கள் பதிவு ஆணையத்தால் (OMARA) 5 ஆண்டுகளுக்கு...

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

போலி நீரிழிவு தடுப்பூசி குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலிய எல்லையில் சட்டவிரோத போலி தடுப்பூசி பேனாக்கள் ஒரு தொகை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, Ozempic தயாரிப்புகளின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க ஆஸ்திரேலியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை...

மெல்பேர்ண் பள்ளி குழந்தைகள் மத்தியில் பரவும் ஆபாசமான புகைப்படம்

மெல்பேர்ண் தனியார் பள்ளியில் சிறுவர்களிடையே குழந்தை துஷ்பிரயோக புகைப்படங்கள் பரிமாறப்பட்டது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களிடையே ஒரு...