Melbourneமெல்பேர்ணில் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் இரு இளைஞர்கள்

மெல்பேர்ணில் பொலிஸாரால் தேடப்பட்டுவரும் இரு இளைஞர்கள்

-

மெல்பேர்ண் பல்பொருள் அங்காடியில் கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றிரவு 8.45 மணியளவில், Seddon, Charles Street இல் உள்ள FoodWorks கடையின் ஊழியர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் இருவர் அச்சுறுத்தி கத்தியைக் காட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் சந்தேகநபர்கள் இருவரும் மதுபானம் வைக்கப்பட்டிருந்த இடத்தை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவர் ஊழியர் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு குற்றவாளிகளும் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளனர், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் இரண்டு சிறார்கள் என நம்பப்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...