இந்தோனேசியாவின் பாலியில் டைவிங் பயணத்தின் போது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விக்டோரியாவில் இருந்து பாலிக்கு சென்றிருக்கும் இந்தப் பெண், சனிக்கிழமையன்று Nusa Penida தீவில் உள்ள Manta Point-ல் மற்றொரு குழுவுடன் டைவிங் செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
டைவிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை சரிபார்த்து, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் தகவல் அளித்ததையடுத்து, உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் டைவிங் நடவடிக்கைகள் தொடங்கியதாக காவல்துறை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தண்ணீருக்கு அடியில் சென்று சுமார் 8 நிமிடங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் நீரின் மேற்பரப்பிற்கு வந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறினார்.
படகில் திரும்பிய போது, மயங்கி விழுந்து விழுந்து கிடந்ததால், படக்குழுவினர் அவளுக்கு அடிப்படை சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
பாலியில் உயிரிழந்த அவுஸ்திரேலிய பெண்ணின் குடும்பத்திற்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.