Newsபிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு!!

-

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் சவுத்போட்டில் 3 சிறுமிகள் கொடூரமாக ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்தின் பெல்வாஸ்ட்டில் வன்முறைச் சம்பவங்கள் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன.

நடன மற்றும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிறுமிகளே இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இது தவிர மேலும் 8 சிறுமிகளும் 2 பொது மக்களும் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, முஸ்லீம் பள்ளிவாசல்கள், அரசியல் புகலிடம் கோரியவர்கள் தங்கியிருந்த இருப்பிடங்கள் என்பன தாக்குதலுக்கு உள்ளாகின.

மகிழுந்துகள், கட்டடங்கள் என்பனவற்றிற்கும் தீ வைக்கப்பட்டதுடன், கடைகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 100க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் மிகைப்படுத்திய தவறான செய்திகள் பரவியதனால் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி தன்மை மற்றும் குடியேற்ற வாசிகளுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வுகள் பரவியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்ட சிறு பராயத்தவர்கள் உட்பட பலருக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு அமைய இன்று மட்டும் மூவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...