Newsஒலிம்பிக் வீராங்கனையை தாக்கி தீ வைத்து எரித்த காதலன்

ஒலிம்பிக் வீராங்கனையை தாக்கி தீ வைத்து எரித்த காதலன்

-

கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிரான்ஸ் நஸோயா கவுண்டி பொலிஸ் அதிகாரி ஜெரமையா கூறுகையில், “2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, ரெபேக்கா செப்டேஜியின் காதலன், டிக்சன் என்டிமா பெட்ரோலை வாங்கி, அவள் மீது ஊற்றி, எரித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும், இருவரும் எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கவுண்டியின் பல தடகளப் பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் ரெபேக்கா செப்டேஜி நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால், கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதேபோல, 2022 ஆம் ஆண்டில், கென்யாவில் பிறந்த பஹ்ரைன் தடகள வீராங்கனையான டமரிஸ் முத்தீ கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். 2023 ஆம் ஆண்டில், உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான பெஞ்சமின் கிப்லாகாட் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

உலகின் மிகவும் ஆபத்தான 20 நகரங்களில் ஆஸ்திரேலிய நகரம்

ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் சமீபத்திய தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில நகரங்கள் அழகான...

இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் விமானம்

பராமரிப்பு பணியின் போது பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களால் இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த குவாண்டாஸ் விமானம் தொடர்பான தகவல்...

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...