சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரித்துள்ளதால் காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிட்னியைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும், இல்லவர்ரா (Illawarra) பகுதியிலும் தீ எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது மேலும் அந்த பகுதிகளில் வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இரு பகுதிகளுக்கும் அதிக தீ அபாயம் விடுக்கப்பட்டுள்ளதுடன், மாலை 4 மணியளவில் கூட 29 டிகிரி வரை வெப்பம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Penrith, Hornsby, Campbelltown மற்றும் CBD உள்ளிட்ட சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்று வீசும் எனவும், இது காட்டுத்தீ அபாயத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அப்பகுதியில் உள்ள அனைவரும் தயாராக இருக்குமாறு கிராமிய தீயணைப்புத் துறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
சிட்னியைச் சுற்றியுள்ள வெப்பநிலை நாளை (07) மீண்டும் குறையத் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் வார இறுதியில் சுமார் 24 டிகிரி வெப்பநிலை மற்றும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.