ஆஸ்திரேலியாவில் உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வால் பெரும்பாலான நடுத்தர ஆஸ்திரேலிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நூடில்ஸ் போன்ற மலிவான உணவுகளை மக்கள் வாங்குவது அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களுக்கான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக $190 செலவிடுகின்றனர்.
வீட்டு வாடகை உயர்வு, உணவு பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்கள் உணவு தேர்வில் மக்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்க காரணம் என ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்துள்ளது.