இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கிழக்கு துருக்கியில் உள்ள எர்சுரம் என்ற இடத்தில் தரையிறக்கி பயணிகளை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.
எனினும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று உள்ளூர் கவர்னர் கூறியதுடன், விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு என்று எழுதப்பட்ட காகிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக துருக்கி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது அதில் 234 பயணிகள் மற்றும் 13 பணியாளர்கள் இருந்தனர்.
விஸ்தாரா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெள்ளிக்கிழமை மும்பையில் இருந்து பிராங்பேர்ட் செல்லும் விமானம் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக திருப்பி விடப்பட்டது, விசாரணைக்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் தவறானது என உறுதி செய்யப்பட்டது.
மற்றொரு விமானம் இன்று காலை மும்பையில் இருந்து பயணிகளை பிராங்பேர்ட்டுக்கு அழைத்துச் சென்றது.