Newsமானிய உயர்வு குறித்து இன்னும் சில நாட்களில் விளக்கம்

மானிய உயர்வு குறித்து இன்னும் சில நாட்களில் விளக்கம்

-

Centerlink Rent Assistance, வேலை தேடுபவர் மற்றும் பிற அரசாங்க மானியங்களுக்கான கொடுப்பனவுகளின் தொடக்கத்துடன் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் கூடுதல் பணத்திற்கான உரிமையைப் பெறுவார்கள்.

இந்த மாதம் தொடங்கவிருக்கும் வாடகை உதவிக் கொடுப்பனவுகளுக்கான கூடுதல் பணத்தை, அடுத்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பெறுவார்கள் என்று Services Australia அறிவித்துள்ளது.

வேலை தேடுபர்கள் பதினைந்து நாட்களுக்குள் கூடுதலாக $71.20 பெறுவார்கள்.

இது ஓய்வூதியங்கள், ஆஸ்வயது ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பாளர் கொடுப்பனவுகள், காமன்வெல்த் வாடகை உதவி, வேலை தேடுபவர் மற்றும் பெற்றோருக்குரிய கொடுப்பனவுகள் உட்பட பல நன்மைகளுக்குப் பொருந்தும்.

செப்டம்பர் 20 முதல், சராசரி இரு வார அதிகரிப்பு $41.50 ஆக இருக்கும் என்றும், இது கொடுபனவுகளின் அடிப்படையில் மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை உதவி மற்றும் வேலை தேடுவோரின் கொடுப்பனவுகளில் மாற்றங்கள் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் காமன்வெல்த் வாடகை உதவிக்கான அதிகபட்ச கட்டணங்கள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் இல்லாமல் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு கூடுதல் $23 பெறுவார்.

ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, வாடகை உதவிக்கான இருவாரக் கட்டணம் $27.02 ஆக அதிகரிக்கும்.

வாரத்திற்கு 0 முதல் 14 மணிநேரம் வரை பகுதிநேர வேலை செய்யும் தனிப்பட்ட வேலை தேடுபவர்களுக்கான கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்கு $849.50 ஆக உயரும் என்று சமூக சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகள் இல்லாத ஒற்றை நபர்களின் கொடுப்பனவுகள் $15.30 ஆகவும், குழந்தைகளுடன் தனியாக இருப்பவர்கள் $19.80 ஆகவும் அதிகரிப்பதைக் காண்பார்கள்.

Latest news

குழந்தையின் பெயரைக் காரணம் காட்டி விவாகரத்து செய்த தம்பதியினர்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். மகனின் பெயருக்காக சுமார் மூன்று வருட...

7600 ஹெக்டேர்களை அழித்துள்ள விக்டோரியா காட்டுத்தீ

இதுவரை விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 7,600 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக மாநில அரசு உறுதி செய்துள்ளது. மேற்கு விக்டோரியாவில் கட்டுப்பாடற்ற காட்டுத்தீயின்...

பட்டியலிடப்பட்டுள்ள உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகள்

உலகின் மிக ஆபத்தான பொழுதுபோக்குகள் குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. iaminsured.co.uk என்ற ஒப்பீட்டு இணையதளத்தின்படி, பொழுது போக்கு எவ்வாறு உயிருக்கு ஆபத்தான அனுபவங்களுக்கு இட்டுச்...

ஆஸ்திரேலியர்களின் Message, Call பற்றி நடத்தப்பட்ட ஆய்வு!

ஆஸ்திரேலிய டெலிகாம் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து புதிய ஆய்வை நடத்தியது. இதன்படி, அவுஸ்திரேலியர்கள் தொலைபேசி பாவனை தரவுகளை...

ஆஸ்திரேலியர்களின் Message, Call பற்றி நடத்தப்பட்ட ஆய்வு!

ஆஸ்திரேலிய டெலிகாம் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து புதிய ஆய்வை நடத்தியது. இதன்படி, அவுஸ்திரேலியர்கள் தொலைபேசி பாவனை தரவுகளை...

19 வருடங்கள் சிறை தண்டனை முடித்து நாடு திரும்பிய மெல்பேர்ண் இளைஞர்

சட்டவிரோத போதைப்பொருள் குற்றச்சாட்டில் பாலியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மெல்பேர்ண் இளைஞர் சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். இதன்படி, 19 வருடங்களாக பாலி சிறையில் இருந்த அவர் விடுதலையான...