அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டில் விசேட கவனம் செலுத்துமாறு வெளிவிவகார திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய யுவதி ஒருவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு இத்தாலியில் இருந்த போது திருடப்பட்ட சம்பவம் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பயணத்தின் போது அவர் எதிர்கொள்ள நேர்ந்த இந்த சம்பவத்தினால் கூடுதலாக 4500 டொலர்களை செலவிட நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கடவுச்சீட்டு திருடப்பட்டுள்ளமை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் விடயமாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இத்தாலியில் கடவுச்சீட்டை இழந்த யுவதி தனது அனுபவத்திலிருந்து மற்றவர்கள் பாடம் கற்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.