Newsஉலகின் முதல் டிரில்லியனராக மாறும் எலான் மஸ்க்!

உலகின் முதல் டிரில்லியனராக மாறும் எலான் மஸ்க்!

-

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல் டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று Informa Connect Academy, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110 வீதம் அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது 251 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் SpaceX கார் நிறுவன உரிமையாளர் , விண்வெளிக்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் ரொக்கெட்டுக்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கு வணிக வாகன தொழில்நுட்ப நிறுவனமான SpaceX மற்றும் X சமூக வலைத்தளம், Star Link செய்மதி இணைப்பு நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் உள்ளார்.

SpaceX மற்றும் SpaceX நிறுவனங்களின் மதிப்பு இந்த ஆண்டு 1195 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என Informa Connect Academy தெரிவித்துள்ளது.

அதே போல், இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி 2028 ஆம் ஆண்டுக்குள் டிரில்லியனராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் வணிக நடவடிக்கைகளில் மின் உற்பத்தி, துறைமுகங்கள் மற்றும் முனையங்கள், விவசாயம் மற்றும் பொது தளபாடங்கள், தொழில் பூங்காக்கள் நீர் சுத்திகரிப்பு, வீதி மற்றும் ரயில் நெட்வொர்க்குகள், தரவு மையங்கள், விவசாயம், உணவு உற்பத்தி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

தற்போது அதானியன் சொத்துமதிப்பு 84 பில்லியன் டொலராக உள்ளது. அதானி குழுமத்தின் வளர்ச்சி விகிதம் 122.86 வீதமாக உள்ளது.

இந்தப் பட்டியலில் Meta நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (facebook) , அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் 2033 க்குள் டிரில்லியனராக மாறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...