Cinemaவெளியானது Bigg Boss season 8 நிகழ்ச்சியின் Promo காணொளி

வெளியானது Bigg Boss season 8 நிகழ்ச்சியின் Promo காணொளி

-

இந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல Reality Show-ன Bigg Boss நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி இம்முறை தொகுத்து வழங்குகிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக Bigg Boss நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக அண்மையில் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து Bigg Boss season 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

7 சீசனுக்கு பிறகு, Bigg Boss season 8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தெரியவந்தது.

இந்நிலையில், Bigg Boss season 8 நிகழ்ச்சிக்கான Promo காணொளி நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது.

முன்னதாக Promo காணொளி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், இம்முறை மாற்று முயற்சியாக Bigg Boss season 8 நிகழ்ச்சியின் Promo காணொளி சென்னை உட்படத் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மக்களால் வெளியிடப்பட்டன.

அதன்படி, சென்னை பெசன் நகர், திருச்சி பிரீஸ் ஓட்டல், மதுரை அம்பிகா கலைக் கல்லூரி, சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, திருநெல்வேலி, விருதுநகர் அப்சாரா சினிமாஸ், வேலூர்- பழைய பேருந்து நிலையம், கடலூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொதுமக்கள் ப்ரோமோ காணொளியை வெளியிட்டனர்.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...