Cinemaமீண்டும் இணைந்த நகைச்சுவை கூட்டணி

மீண்டும் இணைந்த நகைச்சுவை கூட்டணி

-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இணையும் படம் ஒன்று உருவாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் தலைப்புடன் கூடிய First Look poster வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடு காரணமாகப் பல ஆண்டுகள் இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு “கேங்கர்ஸ்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்று (12 செப்டெம்பர்) நடிகர் வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்புடன் கூடிய First Look வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் நகைச்சுவை கூட்டணி, ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும், கைப்புள்ள, வீரபாகு மற்றும் சிங்காரம் என்ற கதாபாத்திரங்களில் கேங்கர்ஸ் படத்திலும் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...