Newsஉடல் வண்ணங்களோடு பாலினத்தையும் மாற்றிக்கொள்ளும் அதிசய மீன் கண்டிபிடிப்பு

உடல் வண்ணங்களோடு பாலினத்தையும் மாற்றிக்கொள்ளும் அதிசய மீன் கண்டிபிடிப்பு

-

உடலின் வண்ணங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மீனை கேள்விப்பட்டுள்ளீர்களா? இந்த மீனுக்கு கிளி மீன் என்று பெயர். ஆங்கிலத்தில் இதனை Parrot Fish என்று அழைக்கிறார்கள்.

கிளி மீன்கள் பவளப்பாறை வாழ்விடங்களில் வாழ்கின்றன. இந்த மீன்களில் 80 இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பசுபிக் பெருங்கடலில் காணப்படுகின்றன. 4 அடி வரை இருக்கும் இம் மீனினம் பவளப்பாறை மற்றும் அதன் மீது குவிந்திருக்கும் பாசி அவற்றின் முக்கிய உணவாக உட்கொள்கிறது.

பெரிய மீன்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்த கிளி மீன்கள் விருப்பம் போன்று நிறத்தை மாற்றிக் கொள்ளும். உதாரணத்துக்கு பாறை மீது இவை ஒட்டியிருந்தால் அதனுடைய நிறத்துக்கு இவை மாறி விடும்.

உலகில் வலிமையான பற்களை கொண்ட உயிரினங்களில் ஒன்றாக இந்த கிளி மீன் உள்ளது. இவை வெள்ளி அல்லது தங்கத்தை விட கடினமானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு கிளிமீனுக்கும் சுமார் 100 பற்கள் வரை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மீன்கள் பவளப்பாறைகளை அதிகம் சாப்பிடுகின்றன. ஒரு பெரிய சைஸ் கிளி மீன் ஒரு ஆண்டில் நூற்றுக்கணக்கான கிலோ பவளப்பாறைகளை சாப்பிடும் தன்மை கொண்டது.

இந்த மீன்கள் இரவில் தங்களைப் போர்த்திக்கொள்ள ஒரு ஒட்டும் கூட்டை உருவாக்குகின்றன. இந்த செயல்பாடு அவைகளை ஒட்டுண்ணிகளிடமிருந்து பாதுகாக்கும். மேலும் வேட்டையாடுபவர்களிடமிருந்து அவற்றின் வாசனையை மறைக்கும் ஒரு பாதுகாப்பு பொறிமுறையாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

சில கிளிமீன்கள் அவை பெண்ணிலிருந்து ஆணுக்கு பாலினத்தை மாற்றும்போது அவற்றின் நிறங்களும் மாறுகின்றன. இது Protogynous hermaphroditism என்று அழைக்கப்படுகிறது. பாலின மாற்றம் காரணமாக, ஹார்மோன்கள் காரணமாக அவற்றின் நிற கலவையும் மாறுகிறது.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...