Newsஉலகின் முதல் தனியார் ஸ்பேஸ் வோக் நிறுவனம்

உலகின் முதல் தனியார் ஸ்பேஸ் வோக் நிறுவனம்

-

SpaceX நிறுவனர் எலான் மஸ்க்கும், பிரபல தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் “Polaris Dawn” எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

இத்திட்டத்தின்படி, SpaceX நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ரொக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், டிராகன் விண்கலம் புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1,400km உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

தற்போது 700km உயரத்தில் புவி சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் SpaceX பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து Space Vogue எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர்.

அப்போது SpaceX நிறுவனம் பிரத்தியேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர்.

மொத்தம் 5 நாட்கள் பயணத்தின் 3-ஆவது நாளான இன்று Space Vogue மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீதம் உள்ள நாட்களில் 30 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளோம் என SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

Harryயால் குணப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகள்

தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு வலி மற்றும் பதட்டத்தைக் குறைக்க சிகிச்சை நாய்கள் (Therapy Dog) உதவுவதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கான்பெர்ரா மருத்துவமனை ஹாரி என்ற...