SportsAccounts Manager-ஆக பணிபுரியும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

Accounts Manager-ஆக பணிபுரியும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்

-

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான நேதன் பிராக்கன் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த நேதன் பிராக்கன், மொத்தமாக கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகியது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நேதன் பிராக்கன் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் T20 கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நேதன் பிராக்கன், 2001 முதல் 2009 வரை ஆஸ்திரேலியா அணிக்காக தொடர்ந்து விளையாடியவர்.

தனது அபார திறமையின் காரணமாக நேதன் பிராக்கன் ஐசிசி ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார்.

ஆனால் எல்லா வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் வரும் காயம் தான் பிராக்கனுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்த போதும், அவரால் பழைய மாதிரி சிறப்பாக செயல்பட முடியவில்லை.

அதேபோல் IPL தொடரில் 2011ஆம் ஆண்டு RCB அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் IPL தொடரில் விளையாடுவதற்கு பிராக்கன் வரவில்லை. இதன்பின் நேதன் பிராக்கன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக விலகிய நேதன் பிராக்கன், தற்போது நியூ சவுத் மேல்ஸ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 47 வயதாகும் நேதன் பிராக்கன், கடந்த ஆண்டு அரசியலிலும் குதித்தார்.

அவர் தற்போது கிரிக்கெட் களத்தில் பயிற்சியாளராக கூட பணியாற்றாமல், விலகி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

வேற்றுகிரகவாசிகள் பற்றி வெளியான வலுவான தடயங்கள்

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வலுவான தடயங்களில் ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இது K2-18b என்று அழைக்கப்படும் ஒரு கிரகம், இது பூமியின் சூரிய மண்டலத்தில் இல்லை, ஆனால்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

மெல்பேர்ணின் தென்கிழக்கே உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள மூராபின் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு பேரை ஏற்றிச்...

சிட்னியில் பரவிவரும் ஒரு நோய் – ஒருவர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு குழுவினரின் அறிகுறிகள் வெளிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 வரை சிட்னி...