நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை அடுத்து அங்குள்ள சிறைச்சாலையில் இருந்து 270 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அனர்த்தத்தால் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 1,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் 281 கைதிகள் பாதுகாப்பான நிலையங்களுக்கு மாற்றப்பட்டபோது தப்பியோடியுள்ளனர் எனவும், அவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தப்பியோடியவர்களின் அடையாளங்கள், அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான NEMA இன் அண்மைய தரவுகளின்படி, வெள்ளம் காரணமாக நைஜீரியா முழுவதும் 269 பேர் இறந்துள்ளனர் எனவும், 640,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.