விர்ஜின் ஆஸ்திரேலியா பல பிரபலமான இடங்களுக்கு பாரிய விலைக் குறைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விர்ஜின் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்திற்கு பயணிக்க பயணிகளை கவர்ந்திழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, இன்று $500,000 விமான கட்டணத்தை குறைக்கப்போவதாக அறிவித்தது.
சிட்னியில் இருந்து கோல்ட் கோஸ்ட் செல்லும் ஒரு வழி உட்பட $45 இல் கட்டணம் தொடங்குகிறது.
சிட்னி முதல் சன்ஷைன் கோஸ்ட் வரையிலான டிக்கெட்டுகள் $59 மற்றும் பிரிஸ்பேர்ண் முதல் ப்ரோசர்பைன் டிக்கெட்டுகள் $69 இல் தொடங்குகின்றன.
$100க்கு கீழ் உள்ள மற்ற வழிகளில் நியூகேஸில்-பிரிஸ்பேர்ண் $75, அடிலெய்டு-கோல்ட் கோஸ்ட் $85, மெல்பேர்ண்-சன்ஷைன் கோஸ்ட் $85, பிரிஸ்பேர்ண்-ஹாமில்டன் தீவு $89 மற்றும் சிட்னி-கெய்ன்ஸ் $95 அறவிடப்படுகிறது.
இதற்கிடையில், Canberra-Brisbane விலை $105, அடிலெய்ட்-பிரிஸ்பேர்ண் $119 மற்றும் Melbourne-Cairns $125 இலிருந்து அறவிடப்படுகிறது.
இந்த விமான டிக்கெட்டுகளை வரும் ஞாயிறு 22ம் திகதி நள்ளிரவு வரை முன்பதிவு செய்யலாம், மேலும் அக்டோபர் 21 முதல் ஜூன் 25 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட திகதியில் அந்த பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.