பதின்ம வயதினரிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான Instagram புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, Instagram பயன்படுத்தும் பதின்ம வயதினரின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Instagram கணக்குகளை கண்காணிக்க முடியும்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நேற்று முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Instagram கணக்குகளின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.
Instagram 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக இந்த புதிய சிறப்பு கணக்கு முறையை அறிமுகப்படுத்துகிறது. இது Instagram-ல் யாரைப் பார்க்கலாம் மற்றும் அவர்களைத் தொடர்புகொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்தும்.
18 வயதிற்குட்பட்ட புதிய பயனர் Instagram கணக்கைத் தொடங்கினால் இந்தத் தடை நேற்று முதல் அமலுக்கு வரும் என்றும், தற்போதுள்ள Instagram பயனர்களுக்கு 60 நாட்களுக்குள் மாற்றங்கள் நடைபெறும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.