Newsஎலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

-

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ப் மைதானத்துக்கு வெளியே, செப். 15 ஆம் திகதியில் இரண்டு நபா்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போது டிரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ளார்.

டிரம்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றபோதும், அவா் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம், எக்ஸ் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கிடம் பயனர் ஒருவர் “டொனால்ட் டிரம்பை சிலர் ஏன் கொல்ல விரும்புகிறார்கள்?” என்று கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், “யாரும் பைடன் அல்லது கமலாவைக் கொல்ல முயற்சிக்கவில்லையா?’’ என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த இடுகையினுடன் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனின் பெயர்களையும் மேற்கோள்காட்டி இருந்தார்.

எலான் மஸ்கின் இந்த பதிவுக்கு பல்வேறான பயனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துகளைப் பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, தான் நகைச்சுவையாக பதிவிட்டதாகக் கூறிய எலான் மஸ்க், அப்பதிவினை நீக்கியும் விட்டார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதியை, வெளிப்படையாக அச்சுறுத்தியதற்காக எலான் மஸ்க் மீது 5 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Latest news

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலிய Skilled விசாவில் ஏற்படும் மாற்றம்

ஜூலை 1 ஆம் திகதி முதல் திறன் விசா வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச வருமான தள்ளுபடியை 4.6 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர வாராந்திர ஊதிய...

ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா மீது புதிய வரிகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, இந்த முடிவு ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய தேர்தல்களில் குறையும் “கழுதை வாக்குகள்” – தேர்தல் ஆணையம் 

ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அடுத்த கூட்டாட்சித் தேர்தல் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், இந்த முறையும் சில "கழுதை வாக்குகள்" வாக்குப் பெட்டிகளில்...

ஆஸ்திரேலிய தேர்தல்களில் குறையும் “கழுதை வாக்குகள்” – தேர்தல் ஆணையம் 

ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அடுத்த கூட்டாட்சித் தேர்தல் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், இந்த முறையும் சில "கழுதை வாக்குகள்" வாக்குப் பெட்டிகளில்...

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் விக்டோரியா காவல்துறையின் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை ஆணையர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தற்காலிக ஆணையர் ரிக் நுஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன்...