பெரியம்மை நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இளம் வயதினர் இடையே மெல்ல பரவிவரும் நிலையில் அதற்கு எதிரான ‘MPOX’ எனும் தடுப்பூசியை 12 வயது முதல் 17 வயது வரையான இளையோருக்கு செலுத்தும் அங்கிகாரத்தை ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி (EMA) ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
‘MPOX’ தடுப்பூசியை EMA 2013ம் ஆண்டு முதல் அங்கீகரித்துள்ள போதிலும் கடந்த வியாழக்கிழமை முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புழக்கத்தில் எடுத்து கொள்ள முன்வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பிரான்சில் பெரியம்மை நோய்த்தொற்று இளம் வயதினர் இடையே மெல்ல பரவிவருவதை அடுத்தே குறித்த முடிவை சுகாதார அமைச்சு வரவேற்றுள்ளது.
இளையோர் மட்டுமன்றி ஓரினச்சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், அவர்களின் வாடிக்கையாளர்கள் போன்றோரும் ‘MPOX’ தடுப்பூசியை செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது என ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் Stella Kyriakides தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த தடுப்பூசி கட்டாயமானது இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது