Newsஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும்...

ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

-

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல்.

காஸாவின் பின்லேடன் என அறியப்படும் சின்வார் ஆகஸ்டு மாதத்தில் தான் ஹமாஸ் படைகளின் தலைவராக பொறுப்புக்கு வந்தார். ஆனால் தற்போது இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஊடகங்களே, சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளன. காஸா பகுதியில் மறைந்திருந்த சின்வார், இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் குறிப்பிட்டு வருகிறது.

ஆனால் எங்கே எப்போது அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையிலேயே விசாரணை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், சின்வார் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் எல்லையில் முன்னெடுக்கப்பட்ட அக்டோபர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சின்வார் என்றே இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது. இதனாலையே, அவர்களின் முதல் இலக்கு சின்வார் என கூறி வந்தனர்.

இருப்பினும் கடந்த 11 மாதங்களில் சின்வார் பல கட்டங்களில் இஸ்ரேல் இலக்கில் இருந்து தப்பி வந்ததாகவே கூறப்படுகிறது. மட்டுமின்றி, அமெரிக்க ராணுவமும் கடந்த மாதம் சின்வார் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தது.

சுமார் 22 ஆண்டு காலம் பயங்கரவாதம், கொலை மற்றும் கடத்தல் திட்டங்களுக்காக இஸ்ரேல் சிறையில் தண்டனை அனுபவித்தவர் சின்வார். தற்போது நடக்கும் போரானது சின்வார் கொல்லப்படும் வரையில் நீடிக்கும் என்றே இஸ்ரேல் ராணுவ தளபதி தொடர்ந்து கூறி வருகிறார்.

Latest news

77 உடன்பிறப்புகளுடன் பிறந்த ஆஸ்திரேலியர்

விந்தணு தானம் செய்பவர்கள் தொடர்பான தேசிய சட்டங்களின் அவசியம் குறித்து ஆஸ்திரேலியாவில் ஒரு சூடான விவாதம் நடந்துள்ளது. குயின்ஸ்லாந்து கருவுறுதல் குழுமத்தில் விந்தணு தானம் செய்பவரின் உதவியுடன்...

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Energy பானங்கள் தடை

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Energy பானங்களை தடை செய்ய இங்கிலாந்து தயாராகி வருகிறது. அதிக அளவு காஃபின் கொண்ட பானங்களால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீங்கைக் கருத்தில்...

Dezi Freeman-ஐ சரணடையுமாறு காவல்துறை அறிக்கை

விக்டோரியாவில் காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக் கொன்று தப்பி ஓடிய Dezi Freeman மற்றும் அவரது கூட்டாளிகளிடம் சரணடையுமாறு காவல்துறை நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளது. Freeman சரணடையுமாறு கேட்கப்படுவார்...

குயின்ஸ்லாந்தில் பிரபலமான உணவகத்தில் பெறப்பட்ட உணவில் பேட்டரி கண்டுபிடிப்பு

குயின்ஸ்லாந்தில் ஒரு பிரபலமான உணவகத்தில் இரவு உணவில் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரிஸ்பேர்ணில் உள்ள Guzman y Gomez-இடமிருந்து Stephanie Weston என்ற...

Hay Fever சீசன் மோசமாகி வருவதாக பொது மருத்துவர்கள் எச்சரிக்கை

வசந்த காலத்தின் தொடக்கமானது மோசமடைந்து வரும் Hay Fever பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் நோயாளிகள்...

Dezi Freeman-ஐ சரணடையுமாறு காவல்துறை அறிக்கை

விக்டோரியாவில் காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக் கொன்று தப்பி ஓடிய Dezi Freeman மற்றும் அவரது கூட்டாளிகளிடம் சரணடையுமாறு காவல்துறை நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளது. Freeman சரணடையுமாறு கேட்கப்படுவார்...