பெர்த்தின் வடக்கில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு ஜோடி off-leash நாய்களால் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை காலை John Moloney பூங்காவில் இரண்டு பெரிய நாய்கள் தீடீரென வந்து தங்களை தாக்கியதாக சம்பவத்தில் காயமடைந்த நபரான ஹெலன் மாடோ கூறினார்.
ஒரு நாய் ஹெலன் மாடோவின் காலையும், மற்றொரு நாய் அவரின் இடுப்பைப் பிடித்து தாக்க ஆரம்பித்துள்ளன. மாடோ உதவிக்காக கத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார் சாரதி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
குறித்த நாய்கள் காரை நிறுத்தி மாடோவை காப்பாற்ற முயன்ற போது தன் காரையும் தாக்க ஆரம்புத்ததாக கார் சாரதி கூறியுள்ளார்.
அதற்குப் பிறகு அந்த நாய்கள் எங்கு சென்றன என்று தெரியவில்லை, என்று மாட்டோ கூறினார்.
20 வயதுடைய மற்றொரு பெண்ணும் பல நாய் கடிகளுக்கு உள்ளாகி தற்போது சிகிச்சைக்காக Joondalup Health Campus-க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நாய்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்று Wanneroo நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததோடு, விசாரணைகள் நடத்தி வருவதாகவும் கூறினார்.