தெற்கு ஆஸ்திரேலியாவின் பிரபல பால் உற்பத்தியாளரான Beston Global Food நிறுவனம், தன்னார்வ நிர்வாகத்திற்குச் செல்லும் பாதகமான ஒரு சரிவை சந்தித்துள்ளது.
இந்நிறுவனம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இதில தெற்கு மாநிலத்தில் இருந்து 159 பேர் பணியாற்றுகின்றனர்.
Beston Global Food நிறுவனம் பல விருதுகள் பெற்ற சீஸ் பொருட்கள், மோர் மற்றும் அதிக தூய்மையான lactoferrin protein ஆகியவற்றிற்கு நன்கு அறியப்பட்டதாகும். அதுமட்டுமின்றி குறித்த நிறுவனம் மருந்து மற்றும் சுகாதார ஊட்டச்சத்து மருந்து நிறுவனங்களுக்கு தனது உற்பத்திகளை விற்பனை செய்து வந்தது.
Australian Securities Exchange (ASX) கோவிட்-19க்கு பிந்தைய வட்டி விகித அதிகரிப்பு, எரிசக்தி செலவுகளில் 300 சதவீதம் அதிகரிப்பு மற்றும் மூலப் பாலின் அதிக விலை ஆகியவற்றின் விளைவாக Beston Global Food நிறுவனத்தின் கடன்கள் அதிக எடை கொண்டதாக அறிவித்தது.
Beston Global Food நிறுவனத்தின் சரிவு உள்ளூர் பால் பண்ணையாளர்களை பேரழிவிற்கு உட்படுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
பல விவசாயிகள் தலா 600,000 டாலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளனர் என்று தெற்கு ஆஸ்திரேலிய பால் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Beston Global Food நிறுவனம் தன் தயாரிப்பு தரத்திற்காக 160க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
மொஸரெல்லா மற்றும் கிரீம் சீஸ் தயாரிப்புகள் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா மற்றும் கொரியாவில் உள்ள 30 க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.